இதழ்கள் இல்லாத
வண்டுகள் மொய்க்காத
தீர்க்கமான
கருப்பு வர்ண பூக்கள்,
உன் கற்றைக்கூந்தல்...!
கற்றைக்கூந்தல்
பூந்தோட்டம் செல்ல
ஒற்றையடிப்பாதை,
நேரெடுத்த வகிடு...!
வகிடு என்ற
ஒற்றையடிப்பாதை
வந்து சேரும் இடம்
தலைவாசல்,
ஆம்
உன் நுதல்..!
நுதல் மேலே
நீர் தெளித்து
நேர்த்தியாக
இடப்பட்ட
ஒற்றைப்புள்ளி கோலம்,
உன் நெற்றிப்பொட்டு..!
பொட்டுக்கு
கீழாக
அனுமதியின்றி
ஆக்சிஜனை
சுட்டுக்கொண்டிருக்கும்
துப்பாக்கிகள்,
உன் நாசி..!
நாசிக்கு மேலாய்
இருபுறமும்
பார்வை மொழியால்
ஓராயிரம்
வார்த்தைகள் எழுதும்
இரட்டை எழுத்தாளர்கள்,
உன் விழிகள்..!
விழிகள் என்னை
காணும்போதெல்லாம்
வெட்கி
சிவந்து மலரும்
தாமரைப் பூக்கள்,
உன் கன்னங்கள்..!
கன்னங்கள் வழியே
கூந்தல் பூக்கள்
அவ்வப்போது
வந்து முத்தமிடும்
அழகான பிறை நிலாக்கள்,
உன் இதழ்கள்..!

''ஓராயிரம்
ReplyDeleteவார்த்தைகள் எழுதும்
இரட்டை எழுத்தாளர்கள்''..
அழகான வரிகள்..வாழ்த்துக்கள்
இதழ்கள்
ReplyDeleteஉன் ஒரு துளி புன்னகையில்
சிவந்த செங்காந்தள் மலர்.............
ஆரம்பித்தது இதழ்கள்
ReplyDeleteமுடிவும் அப்படியே...
அருமை சபா... மிக அருமை!
ReplyDeleteநன்றி நண்பா...
ReplyDeleteநுதல் மேலே
ReplyDeleteநீர் தெளித்து
நேர்த்தியாக
இடப்பட்ட
ஒற்றைப்புள்ளி கோலம்,
உன் நெற்றிப்பொட்டு..
chance eh ila.super